வெளிநாட்டில் வேலை வேணுமா? விசா கிடைக்க இந்த கோயிலுக்கு போய் வாங்க... குவியும் பக்தர்கள்!

 
சில்கூர் விசா வெளிநாடு

நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு கனவு இருக்கும் நன்றாக படித்து விட்டு கைநிறைய சம்பளம் பெற்று, குழுந்தை குட்டியோடு செட்டில் ஆக வேண்டும் என்பது. ஆனால் படித்து விட்டு பல்லாயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கும் நம் நாட்டில் நமக்கு வேலை கிடைக்காது எனக் கருதி நீங்களே ஒரு வேலியை அமைத்துக் கொண்டிருப்பீர்கள் அல்லது வெளிநாட்டிற்காவது செல்ல வேண்டும்... சம்பாதிக்க வேண்டும் என மனம் குமுறும். அப்படி குமுறினாலும் வெளிநாடு செல்ல விசா வேண்டுமே? அது தானே பெரிய பிரச்சனை. அந்த கவலையை விடுங்கள்.

நீங்கள் செல்ல வேண்டியது சிலக்கூர் பாலாஜி கோயிலுக்குத் தான். ஐதராபாத் அருகில் இருக்கும் சில்க்கூர்வாசிகள் சிலாகித்துச் சொல்கிறார்கள். வேலை, படிப்பு போன்றவற்றிற்கு வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால், விசா கிடைக்கும் என்பது அதீத நம்பிக்கை. இதன் காரணமாகவே இந்தக் கோயிலை ”விசா கோயில்”என்று சொல்பவர்களும் உண்டு.

ஐதராபாத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோயில். மூலவர் பூதேவி மற்றும் ஸ்ரீதேவி. பெருமாளின் சிறப்புப் பெயர் பாலாஜி. இந்தக் கோயிலுக்கு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சில்க்கூரில் வெங்கடேஸ்வரப் பெருமாள் என்பவர் வாழ்ந்து வந்தார். 

சில்கூர் விசா வெளிநாடு கோயில் பக்தர்கள்

ஒவ்வொரு ஆண்டும்.அறுவடை முடிந்ததும் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து, தனது நிலத்தில் விளைந்த பொருட்களை அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு வயதானதும், முன்பு போல உழைக்கவோ, திருப்பதி செல்லவோ முடியவில்லை. அந்த வருத்தத்துடன் அவர் தன் வயல் அருகில் படுத்து உறங்கிய பொழுது கனவில், ‘நீ என்னைத் தேடி திருப்பதிக்கு வர வேண்டாம். உனது வயலில் உள்ள எறும்புப் புற்றில் நானே குடி கொண்டுள்ளேன்' என்று அருளியிருக்கிறார் பெருமாள். கண் விழித்த அவர் உடனே வயலில் இருந்த எறும்பு புற்றை தோண்டிப் பார்த்த போது, அங்கு பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் திருமண திருக்கோலத்தில் பாவாஜியின் திருமேனி கிடைத்தது. பின்னர் ஆகம விதிகளின்படி 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்த ராமதாசின் மாமன்மார்களான வெங்கண்ணவும்,அங்கண்ணவும் இக்கோயிலை கட்டினர்களாம்.

திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் உள்ள பெருமாளை வணங்கினால் திருப்பதிக்கு சென்ற பலன் கிடைக்கும். பெருமாளை பிரார்த்தித்து தங்கள் வேண்டுதலை சொல்லி 11 முறை வலம் வந்தால், அது நிறைவேறும் என்பது ஐதிகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமானை 108 முறை வலம் வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவது வழக்கம். நாடு முழுவதும் இருந்தும் 'ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் 75ஆயிரம் முதல் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரம்மோற்சவம் மற்றும் பூலாங்கி சேவைகளின் போது பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. வெங்கடேஸ்வரப் பெருமாள் தாயார் சில்க்கூர் பாலாஜி கோயில் வழக்கமாக உள்ளது. இத்திருக்கோயில் காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்துள்ளது. காலை முதல் மாலை வரை பக்தர்கள் பிரதட்சணம் செய்யலாம். செல்போன் எடுத்துச் செல்ல கண்டிபாக அனுமதி இல்லை. சிறப்பு தரிசனம் என்று யாருக்கும் முன்னுரிமையும் கிடையாது. ஆண், பெண் என்று தனித்தனி வரிசையில் சென்று பெருமாளை தரிசிக்கலாம். இக்கோயிலில் உண்டியல்  கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

சில்கூர் விசா வெளிநாடு கோயில்

எல்லாம் சரி...  எப்படிப் போவது? அது தானே உங்கள் கேள்வி? சென்னை செண்ட்ரலில் இருந்து தினமும் ஹைதராபாத்திற்கு ரெயில்கள் செல்கின்றன. செகந்திராபத்தில் இறங்கி மெஹதிப்பட்டினம் செல்லும் பேருந்தில் கடைசி நிறுத்தத்தில் இறங்கி கொள்ளலாம். பேருந்து எண் 5. அதன் பின்னர்  மெஹதிப் பட்டினத்திலிருந்து சில்கூர் பாலாஜி கோயிலுக்கு பேருந்து எண் 288Dயைப் பிடிக்க வேண்டும். வசதி இருந்தால் செகந்திராபாத் ஸ்டேஷன் வெளியே இருக்கும் வாடகைக் கார்களை அணுகலாம். ஒரு மணி நேர பயணத்தில் கோவிலை அடைந்து விடலாம். பின்னர் மீண்டும் அதே காரில் திரும்பி விடலாம். இதற்கு கட்டணமாக 1500 முதல் 1750 வரை வசூலிக்கிறார்கள்.

என்ன கிளம்பிட்டிங்களா ஆல் தி பெஸ்ட்!

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web