ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை.. அதிக கட்டணம் வசூலித்தால் பறிமுதல்.. !!

 
koyambedu bus stand ஆம்னி பஸ்


தமிழகத்தில்  அக்டோபர்  23ம் தேதி ஆயுதபூஜையும், 24ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக  சனி, ஞாயிறு விடுமுறை . இதனால்  தொடர் விடுமுறையை  முன்னிட்டு பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்  . ஆயுத பூஜை நாட்களில்   ஏற்கனவே ரயில்களில் முன்பதிவு டிக்கெட் பல நாட்களுக்கு முன்பே விற்று தீர்ந்துவிட்டது. அதேபோல் அரசு விரைவு பேருந்துகளிலும்  முன்பதிவு முடிந்து விட்டது. ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லலாம் என முடிவு செய்துள்ளனர்.   கடந்த சில நாட்களாக பயணிகள் பலர் ஆம்னி பேருந்துகளில்  முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆம்னி

பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி  பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள்  தமிழகத்தில் 1000க்கும் மேற்பட்ட  ஆம்னி பேருந்துகள்   மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளன.  அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆம்னி பேருந்துகளில்  பண்டிகை காலங்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர் புகார்கள் பதிவாகி வருகின்றன.  

தனியார் ஆம்னி பேருந்து கோயம்பேடு

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் “ பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னிபேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட கூடாது. தமிழகம் முழுவதும் பல்வேறு வழித்தடங்களில்  நாளை  அக்டோபர் 20ம் தேதி இரவு முதல் 25ம் தேதி இரவு வரை   வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குழு திடீர் ஆய்வில் ஈடுபட உள்ளது.    கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பேருந்து  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதே போல் பயணிகளும்  சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் பர்மிட் இல்லாமல் இயக்கினால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web