உஷார்.... பைக்ல லிப்ட் கேட்டு வழிப்பறி செய்யும் கும்பல்! வண்டி, செல்போன், நகைகளைப் பறித்த கும்பல் கைது!

 
வழிப்பறி

ஆபத்துக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் கூட இனி யாருக்குமே வரக் கூடாது என்பதைப் போல நடந்து கொள்கிறார்கள் சிலர். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் விழிப்புணர்வோடு, பரிதாபம்  பார்க்காமல் பயணிக்க வேண்டும் என்பதையே ஒவ்வொரு அனுபவமும் சொல்லிக் கொடுப்பதாக மீண்டும் மீண்டும் வகுப்பெடுக்கிறார்கள். வழிப்பறி கும்பல் அதிகரித்து வருவது முக்கிய காரணம்.

அப்படி திருப்பூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இளைஞரிடம் இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு, தனியே இளைஞரை அழைத்துச் சென்று, அடித்து உதைத்து, அவரது வண்டியையும் பிடுங்கி கொண்டு, செல்போனையும், பணத்தையும் வழிப்பறி செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். 

திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பெர்னான்டஸ். இவர், கடந்த வியாழக்கிழமை இரவு, பல்லடத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தார். 

murder

அருள்புரம் அருகே வந்தபோது அவரிடம் லிப்ட் கேட்ட ஒருவர், தனது இருசக்கர வாகனம் பெட்ரோல் தீர்ந்து நடுவழியில் நின்று விட்டதால், அந்த இடத்தில் தன்னை இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார். அவரைப் பார்த்து பரிதாபம் அடைந்த பெர்னான்டஸ், தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றார். 

பாச்சாங்காட்டுபாளையம் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி வழியாக சென்றபோது, அங்கு மறைந்திருந்த 3 பேர் தடுத்து நிறுத்தி தாக்கி, இருசக்கர வாகனம், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன், ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு விரட்டியுள்ளனர். 

Palladam PS

அவர்களிடம் இருந்து தப்பி வந்த பெர்னாண்டஸ் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி, சிவக்குமார், சந்தோஷ் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வழிப்பறியில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

From around the web