லிப்ட் கேட்டது குற்றமா?.. வண்டியை பாதியில் நிறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள்!

 
வரதராஜன்

மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி வடபாடி தெருவை சேர்ந்தவர் பூரசாமி மகன் ஜெகநாதன்,46. இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் சிட்பண்ட் ஒன்றில் வசூல் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஆனந்தாண்டவபுரம் சாலையில் வசூலுக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். வாகனம் பஞ்சர் ஆனதால், இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் லிப்ட் கேட்டு மயிலாடுதுறைக்கு சென்றார். கல்கக்காணிமுட்டம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத 2 பேர் இருசக்கர வாகனத்தை மறித்து நிறுத்தினர்.

அவரை லிப்ட் கொடுத்த இருசக்கர வாகன ஓட்டி மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள், ஜெகநாதனை அடித்து, செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடினர். பின்னர், கல்கனிமுட்டத்தைச் சேர்ந்த சிலர் உதவியுடன், கடத்தல்காரர்களைப் பிடித்தபோது அவர்களில் இருவர் தப்பிச் சென்றனர். லிப்ட் கொடுத்த நபரை பிடித்து அடித்து, மரத்தில் கட்டி வைத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு வந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, மயிலாடுதுறை அருகேயுள்ள கழனிவாசல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் வரதராஜன் (18), காரின் மகன் சுபாஷ் (18), மேலும் மயிலாடுதுறை கல்க்காணிமுட்டம் ஈவெரா தெருவை சேர்ந்த 15 வயது சிறுவன் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதில் திட்டமிட்டு பணம் திருடப்பட்டதும், எதிர்பாராதவிதமாக ஒருவர் சிக்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜன், சுபாஷ், சிறுவன் ஆகிய 3 பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரதராஜன், சுபாஷ் ஆகிய 2 பேரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். மேலும், சிறுவனை தஞ்சாவூர் குழந்தைகள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web