டீ குடிக்க கேட்டது ஒரு குத்தமா?.. இளைஞரை பீர் பாட்டிலால் குத்திய தம்பதியினர் கைது!

 
பிரபு - காயத்ரி

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராகுல் (வயது 20). இவருக்கும் உறவினர்களான பிரபு-காயத்ரிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் டேம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள கடையில் ராகுல் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரபு மற்றும் அவரது மனைவி காயத்ரியை டீ குடிக்க அழைத்தனர்.

டீ

அப்போது இருவரும் ஆத்திரமடைந்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க அழைக்கிறீர்கள்" என ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் அடித்தனர். இதில், ரத்த காயங்களுடன் கீழே விழுந்த ராகுலை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து ராகுல் அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸார், ரிச்சி தெருவைச் சேர்ந்த பிரபு, காயத்ரி ஆகிய இரு தம்பதிகளை கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். விசாரணைக்கு பின் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!