நடந்து போனது ஒரு குத்தமா?.. வலுக்கட்டாயமாக 300 ரூபாய் அபராதம் போட்ட காவல்துறை.. ஷாக்கான நபர்!

 
சுஷில் குமார் சுக்லா

நாட்டின் பரபரப்பான சாலையில் விதிகளை மீறி செல்வோர்களை கண்டறிந்து போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிக்கின்றனர். ஆனால், சில நேரத்தில் விசித்திரமான அபராத வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் அபராதத்தை காவலர்கள் விதித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியைச் சேர்ந்த சுஷில் குமார் சுக்லா, தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினர்களை அழைக்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாகச் சென்ற ஒரு போலீஸ் வாகனம் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது, பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

போலீஸ்

பின்னர், சிறிது நேரம் தடுத்து நிறுத்தி, ஹெல்மெட் அணியாததற்காக ரூ.300 அபராதம் விதித்தது. இதனால் கோபமடைந்த சுஷில் குமார் சுக்லா, இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். அஜய்கர் துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ராஜீவ் சிங் படோரியா தலைமையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web