FACT CHECK: திமுகவுக்கு வாக்களிக்காததால் இளம்பெண் கொலையா? உண்மை என்ன?

 
கோமதி

 தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. வாக்குப்பதிவிற்கு பிறகு கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் திமுகவிற்கு வாக்களிக்காத காரணத்தால் கொலை செய்யப்பட்டதாக  சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.  இது குறித்து தீவிர வலதுசாரி ஆதரவாளர் சின்ஹா  பொய்யான செய்தியை பரப்பி இருந்தார். அதில்., கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி பாஜகவிற்கு வாக்களித்தார்.   அவர் பாஜகவிற்கு வாக்கு அளித்த காரணத்தால் அந்த பெண்ணை திமுகவினர் அடித்து கொலை செய்தனர் என்ற செய்தியை  சின்ஹா பரப்பி இருந்தார்.  வடஇந்தியர்கள் பலரும் இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு  தமிழ்நாட்டையும்,   திமுகவையும் விமர்சனம் செய்தனர்.   கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண்   குடும்ப பிரச்சனை காரணமாகவே கொலை செய்யப்பட்டார்.

கோமதி

இந்த செய்தியை வெளியிட்டு  போலீசார் சின்ஹா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளித்துள்ளனர்.   போலீசார் விடுத்த எச்சரிக்கையை அடுத்து சின்ஹா தனது பொய்யான போஸ்டை நீக்கி என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்பது போல கெஞ்சி கேட்டுள்ளார்.  கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.  கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி. பாண்டியன்.  அறிவுமணி, அருள்செழியன். தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ்  மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், அவரது  மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார் அனைவரும் திரண்டிருந்தனர். இதில் ஜெயப்பிரகாஷ்  ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.  ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு  வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த தகராறில்  ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதில்  ஜெயக்குமாரின் மனைவி கோமதி  தலையிட்டு பிரச்னையை தடுக்க முயன்றார். திடீரென அவர்  கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது.

உடனடியாக உறவினர்கள் அனைவரும் கோமதியை  சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்து  விட்டதாக தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து போலீசார் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 20ம் தேதி பகல் 1 மணிக்கு வழக்கு பதிவு செய்தனர்.  குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில் ஐந்து பேர் கலைமணி, அவரது மனைவி, ரவி,  மேகநாதன் மற்றும்  அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர. அவர்களிடம்   நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.  வீடியோவில் குறிப்பிட்ட படி  குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக  கூறியது  முற்றிலும் தவறான கருத்து. இச்சம்பவம் குறித்து வெளியான காணொளியும் பொய்யானது என போலீசார் கூறியுள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவலை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web