'படிப்பு Waste'.. வீடியோ வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய மாடல் அழகி!
சாரா டார் என்பவர் அமெரிக்காவின் டெக்சாஸில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் மாடலாகவும், அழகு ராணியாகவும் உள்ளார். இந்நிலையில் “ஒன்லி ஃபேன்ஸ்” என்ற தளத்தில் தனக்கென கணக்கு தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இணையத்தில் வைரலாக பரவி வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் தனது வாழ்க்கை அனுபவங்களை யூடியூப்பில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், நான் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பட்டப்படிப்புக்காக பிரபல பல்கலைக்கழகத்தில் படித்து வந்தேன். சில காலத்திற்கும் மேலாக சூழ்நிலை காரணமாக, எனது கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டேன்.
பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் மாடலிங் துறையில் சேர்ந்தேன். படிப்பை பாதியில் நிறுத்தியது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தத் துறையில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன் என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பல்வேறு விவாதங்களுக்கு உள்ளானது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!