மடப்புரம் காவலாளி மரணம்... தவெக போராட்டம் ஜூலை 6ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

 
 தவெக


 
 திருப்புவனம் மாவட்டத்தில் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை ஜூலை 3ம் தேதி  எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் தவெக போராட்டம் நடைபெற இருந்தது.  அதே மைதானத்தில் ஆசிரியர் போராட்டம் நடைபெறுவதால் ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை சேபாக்கம் சிவானந்தா சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அஜீத்
அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற காவல் மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இச்சம்பவம் குறித்து   த.வெ.க தலைவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்  ” சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தி விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு, முதலில் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சித்தது.  

அஜீத்
கடந்த 4  ஆண்டுகளில் மட்டும்  24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை  அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில், அந்த 24 பேரின் மரணம் தொடர்பாக, வெள்ளை அறிக்கையைத் தமிழ்நாடு உள்துறை அமைச்சர் உடனடியாக வெளியிட வேண்டும்” என கேட்டிருந்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?