தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்... தேமுதிக நிர்வாகிகளுக்கு பிரேமலதா வேண்டுகோள்!

 
பிரேமலதா

 தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது.மே 1ம் தேதி வரை தமிழகத்தில் வெப்ப அலை நிலவும் என 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் சென்னை மாநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் பந்தல்

அதில்  தேர்தல் முடிவுக்கு வந்தாலும், வெப்பத்தின் தாக்கம் முடிவுக்கு வரவில்லை. வெப்ப அலையை தொடர்ந்து  அக்னி நட்சத்திரம் தொடங்க இருப்பதாலும், தமிழகம் முழுவதும் தேமுதிகவின் சார்பாக தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் செய்வதை போல்  நடப்பாண்டிலும் தொடர்ந்து செய்ய வேண்டும்.

தண்ணீர் பந்தல்

இதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, வட்டம், ஊராட்சி ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்து அதில் குடிநீர், நீர்மோர், இளநீர், குளிர்பானம், தர்ப்பூசணி இவைகளை பொது மக்களுக்கு வழங்கி, அவர்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துக்   கொள்கிறேன். 
"இயன்றதைச் செய்வோம் இல்லாதவற்கே" என்பது  கேப்டன் நமக்கு சொல்லி கொடுத்த பாதை.  நம்மை சுற்றியுள்ள மக்களுக்கு இந்த கோடை காலத்தில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து கோடை வெப்பத்தில் இருந்து மக்களை காப்பது நமது கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web