தீபாவளிக்கு கோடிகளைக் குவிக்கணும்... டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10% போனஸ்... தமிழக அரசு அறிவிப்பு!

 
டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையை ஒட்டி கோடிகளைக் குவிக்கும் டாஸ்மாக், இந்த வருடமும் தீபாவளியை குறி வைத்து புதிய பீர் வகைகளுடன் களமிறங்குகிறது. இந்நிலையில், டாஸ்மாக் ஊழியர்களை குஷிப்படுத்த 10 சதவீத தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டாஸ்மாக்

தீபாவளி பண்டிகையையொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்துடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், தீபாவளிக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10% போனஸ் தரப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ்

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்ட நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10% போனஸ் மட்டுமே தரப்படுகிறது. முன்னதாக 20 சதவீதம் போனஸ் வழங்குவது தொடர்பாக அமைச்சருக்கு டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web