இனி இந்த சரக்கை விற்க மாட்டோம்.. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த திடீர் உத்தரவு.. ஷாக்கில் மது பிரியர்கள்!
'டாஸ்மாக்' கடைகளில் பல்வேறு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விற்பனைக்கு முன் மதுபானத்தின் தரம் சரிபார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான், 2021 ஆம் ஆண்டுக்கான 'கோல்டன் வாட்ஸ் நம்பர் 1 பிராந்தி' விற்பனைக்கு ஏற்றதல்ல என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 'டாஸ்மாக்' கடைகளில் இந்த வகை மதுபானங்கள் விற்பனை செய்யப்படு வந்தது.

இந்த மதுபாட்டில்கள் தற்போது கடையில் இருப்பு வைத்திருந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட மதுபான கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, 'டாஸ்மாக்' கடை ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 'டாஸ்மாக்' நிர்வாகத்தின் இந்த உத்தரவு, இந்த பிராந்தியை குடித்து பழக்கப்பட்ட மது பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிராந்தி தயாரிக்கும் நிறுவனம் மன்னார்குடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
