ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மாட்டோம்... ஆதரவாளர் சாலை மறியல்!

 
ஆம்ஸ்ட்ராங்

 சென்னை   செம்பியம் பகுதியில் வசித்து வருபவர்  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7 மணிக்கு பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது  6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆம்ஸ்ட்ராங்


சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில்  ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.

ஆம்ஸ்ட்ராங்

இந்நிலையில்  , கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புக்காக 800க்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web