விடிந்தால் திருமணம்.. கார் மீது லாரி மோதி கோர விபத்து.. மணமகன் உட்பட 4 பேர் பரிதாப பலி!

 
கான்பூர் விபத்து

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஆகாஷ் அஹிர்வாராவுக்கு (25) திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக மணமகன் வீட்டில் இருந்து 6 பேர் காரில் மணமகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.கான்பூர் நெடுஞ்சாலையில் படகோன் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி திடீரென அதிவேகமாக கார் மீது மோதியது. தாக்குதலை அடுத்து கார் தீப்பிடித்து எரிந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் சிக்கிய இருவரையும் மீட்டனர். ஆனால், எஞ்சியவர்களை காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் மணமகன் ஆகாஷ் அஹிர்வாரா, அவரது சகோதரர், 4 வயது குழந்தை, கார் டிரைவர் உள்பட 4 பேர் உடல் கருகி பலியாகினர். உயிர் பிழைத்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மோதி மணமகன் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web