மூன்று நாளில் கல்யாணம்... கையில் உலக கோப்பை டாட்டூ... ஸ்மிருதி மந்தனாவின் நெகிழ்ச்சி செயல்!
மும்பையைச் சேர்ந்த 29 வயதான, இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக தனது இடது கையில் உலக கோப்பை படத்தை டாட்டூவாக வரைந்து, பதிந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியனாகப் பட்டம் வென்றது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களையும் அளவிலா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மகிழ்ச்சியை என்றும் தற்காலிக நினைவாகக் கையடக்க கலை வடிவில், தனது கையில் செதுக்கியுள்ளார் ஸ்மிருதி மந்தனா என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் உடன் காதலில் இருப்பதாகவும், வரும் நவம்பர் 20ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்மிருதியின் இது போன்ற பாரபட்சம் இல்லா, நாட்டின் மீதான நேர்மையான காதல் மற்றும் வெற்றி கொண்டாட்ட வாழ்வியல் அவரது ரசிகர்கள் மனங்களில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
