ஆன்லைன் கேமிங்கிற்கு ஆப்பு... ஜி.எஸ்.டி கூட்டத்தில் முக்கிய முடிவு!

 
ஆன்லைன் விளையாட்டு

50வது சரக்கு மற்றும் சேவை கவுன்சில் ஜூலை 11ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங்கிற்கான வரி விகிதம் குறித்து விவாதிக்கும் என்று உயர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. இம்முறை இது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். சட்டப்பூர்வ நிலைப்பாட்டில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், ஆனால் அது மாநிலங்களின் கைகளில் இருப்பதால் முடிவு குறித்து கருத்து தெரிவிப்பது கடினம் என்றும் கூறினார்.

ஆன்லைன்

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு (GoM) டிசம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தபோது ஒருமித்த கருத்துக்கு வரமுடியவில்லை, அதன் முந்தைய நிலைப்பாட்டில் இருந்த 28 சதவிகித வரியை முழு விருப்ப மதிப்புக்கு நிகரமாக உயர்த்தவும் முடியவில்லை, விவாதத்தின் முடிவைக் கணிக்க முடியாது என்று கூறிய அந்த அதிகாரி, அது மாநிலங்களைப் பொறுத்தது மாறும் என்றும் கூறினார். 

நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி

ஆன்லைன் கேமிங்கில் இருந்து கிடைக்கும் வருவாய் காரணமாக சில மாநிலங்கள் வரியை அதிகரிப்பதை எதிர்க்கலாம்" ஜிஎஸ்டி கவுன்சில் திறன் அடிப்படையிலான கேமிங் தொடர்பாக வேறுபட்ட வரியைப்பற்றி விவாதிக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஜிஎஸ்டி  கவுன்சில் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் இவ்விஷயத்தை கவனித்தில் கொள்ளும். இது டிசம்பர் 2023 க்குள் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web