களையிழக்கும் கார்டன் சிட்டி... புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்!

 
மரம் காடு வனம் கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி தேனி

பெங்களூருவில் புறநகர் ரயில் பாதை திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதும்   32,572 மரங்கள் வெட்டப்படவுள்ளன. இதனை ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மரங்களுக்கு பதிலாக  ஒவ்வொரு மரத்துக்கும் இணையாக 10 மரங்களை நட அவர்கள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பொதுக்கூட்டம் , ஜூன் 14ம் தேதி  நடத்த உள்ளனர்.

 

ரயில்


இக்கூட்டத்தில், 32,000-க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.  இது குறித்து கே-ரைட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”அடையாளம் காணப்பட்ட மரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இருப்பிடங்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், வெட்டத் திட்டமிடப்பட்டுள்ள மொத்த மரங்களில், 17,505 மரங்கள் புருஹத் பெங்களூரு மகாநகர பலிகே  எல்லைக்கு அப்பால், தேவனஹள்ளியில் உள்ள அக்குபேட் டிப்போவில் உள்ளன” எனக் கூறியுள்ளது.  இந்த மரங்களில் பெரும்பாலானவை யூகலிப்டஸ் மற்றும் அகாசியா மரங்கள். இதில் யூகலிப்டஸ் மரத்தை வெட்டுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது  கார்டன் சிட்டி முழுவதும் 4 வழித்தடங்களாக 148.1 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த ரயில்பாதை திட்டத்தில் மீதமுள்ள 15,067 மரங்களில், மொத்தம் 1,071 மரங்கள் பிபிஎம்பி எல்லைக்கு அப்பாற்பட்டவை. பிபிஎம்பி எல்லைக்குள் 13,996 மரங்கள் மட்டுமே இருப்பதாக கே-ரைட் நிறுவனம் கூறியுள்ளது. இன்றுவரை, பிபிஎம்பி எல்லைக்குள் 2,098 மரங்களை வெட்டவும், 178 மரங்களை நடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  

 

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

மரங்கள் பெருமளவில் அகற்றப்படுவதை அடுத்து, ஆன்லைன் மூலம் கருத்துக்கேட்பு மனுக்கள் பெறும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
மரங்கள் அழிப்பு நகரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும். இதனால்  வெட்டப்படும்  மரங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கே-ரைட் நிறுவனத்துக்கு அளித்த மனுவில் கோரப்பட்டது.  1976ல்  கர்நாடக மரம் பாதுகாப்புச் சட்டத்தை மனதில் வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அடையாளம் காணப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெட்டப்பட்ட மரங்களை இடமாற்றம் செய்ய அல்லது அதற்கான இணையாக மரக்கன்றுகளை நட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web