வார விடுமுறை... சுற்றுலா தலங்களில் குவிந்த பயணிகள்!

சனி, ஞாயிறு வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.நாளை தமிழகத்தில் 31 மாவட்டங்களில் 113 பிரபல கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால், கோயில்களில் பக்தர்கள் கூட்டம் இன்றிலிருந்தே குவிந்து வருகின்றனர். அதே போன்று சுப முகூர்த்த தினம், உள்ளிட்டவைகளாலும் பலரும் வெளியூர் கிளம்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு ஆர்வத்துடன் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட படகு துறையில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் படகில் உற்சாகத்துடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்த்து விட்டு திரும்பினர்.
இதேபோல் விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அதே போன்று குற்றாலத்திலும் சீசன் துவங்கி உள்ளதால் திருநெல்வேலி, தென்காசி, தேனி மாவட்டங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!