வெல்கம் வேர்ல்டு சாம்பியன்ஸ்.... டெல்லி வந்த இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு!

 
இந்தியா
 

டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணி வீரர்கள், போட்டி முடிந்ததும் இந்தியா திரும்ப இருந்த நிலையில் அங்கு புயல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களது பயணம் ஒத்திப் போடப்பட்டது. அவர்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்ட நிலையில், சிறப்பு விமானம் மூலம் நேற்று புறப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு விமானம் டெல்லியை வந்தடைந்தது. 


இன்று காலை 11 மணிக்கு இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற  உள்ளனர். அதன் பின்னர் இன்று மாலை உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் மும்பையில் ரசிகர்களை சந்திக்கின்றனர். திறந்தவெளி வாகனத்தில் அனைத்து வீரர்களும் மும்பையில் உலகக் கோப்பையுடன் ஊர்வலம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கின்றனர். இதில் கலந்து கொள்வதற்காக அணியின் அனைத்து வீரர்களும் மும்பை செல்கின்றனர்.  

இந்தியா

இன்று மாலை உலகக் கோப்பையுடன் மும்பை மரைன் டிரைவ் முதல் வான்கடே மைதானம் வரையில் ஊர்வலமாக செல்கின்றனர். இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையேயான தூரம் கிட்டத்தட்ட 9.7 கிமீ. இந்த தூரம் வரையில் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலமாக செல்கிறார்கள். இந்நிகழ்ச்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பு செய்கிறது. நிகழ்ச்சியில் இறுதியில் இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web