எங்களது உத்தியை இப்போ சொல்ல மாட்டோம்.. நாளை தான் தெரியும்.. புதிர் போட்ட ராகுல் காந்தி!

 
ராகுல் காந்தி

18வது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 294 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்திய கூட்டணி 232 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய லோக்சபா தேர்தல் அரசியல் தேர்தல் அல்ல. பாஜகவை மட்டுமல்ல, சிபிஐ, அமலாக்க இயக்குனரகத்தையும் தோற்கடித்துள்ளோம். அகில இந்திய கட்சி மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவே தேர்தலை சந்தித்தோம். ஏழைகளுக்கான தொலைநோக்கு திட்டம், தேசத்திற்கான தொலைநோக்கு திட்டம் என மக்களை சென்றடைந்தோம். ஏழைகளிடம் பறித்த பணம் அதானிக்கு சென்றது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை. மோடி பின்னடைவை சந்தித்தும் , அதானியின் பங்கு குறைகிறது.

ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்காகவே அரசியல் சாசனம் எழுதப்பட்டது. ஆட்சி அமைக்க  போகிறமோ? எதிர்க்கட்சி வரிசையில் அமரப் போகிறோமா? என்பதை நாளை  கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளோம். நமது உத்தி என்ன என்பதை இப்போது சொன்னால் மோடி உஷாராவார். ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வது என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எந்த தொகுதியில் இருந்து ராஜினாமா செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. உத்தரபிரதேச மக்களின் அரசியல் அறிவை கண்டு வியக்கிறேன். இந்திய கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி. உத்தரபிரதேச மக்களுக்கு சிறப்பு நன்றி. அரசியலமைப்பை பாதுகாப்பதில் உத்தரபிரதேச மக்களின் பங்கு அதிகம். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்திய கூட்டணி வெற்றி பெற்றதற்கு பிரியங்கா காந்தி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web