பத்திரம் மக்களே... தமிழகத்தில் வெஸ்ட் நைஸ் வைரஸ்? சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை!

 
வெஸ்ட் நைஸ் வைரஸ்

 கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் க்யூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவக்கூடியது. இதில் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.  தலைவலி, வாந்தி, காய்ச்சல் உடல் வலி இந்த  நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.  தொடர் காய்ச்சல்,  கழுத்து விரைப்பு, மயக்கம், கோமா , பலவீனம்,  பக்கவாதம் , மூளைக்காய்ச்சல் ஒரு சிலருக்கு ஏற்படலாம். சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு , மலப்புரம், திருச்சூர் மாவட்டங்களில் பெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

வெஸ்ட் நைல் காய்ச்சல்
தமிழகத்தை பொறுத்தவரை  வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.  இருப்பினும் கொசு பரவலை பொதுமக்கள் கட்டுப்படுத்த வேண்டும். பறவைகளிடமிருந்து கொசுக்களுக்கும், கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் . 'க்யூலெக்ஸ்' வகை கொசுக்களால் மனிதர்களுக்கு வெஸ்ட் நைல் வைரஸ் பரவக்கூடும். இதனால் கொசு பரவலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.  
வைரஸ் தொற்றுக்கு ஆளாபவர்களில் 80% பேருக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை. ஆப்ரிக்கா, ஐரோப்பா, மத்திய ஆசிய பகுதிகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவி வருகிறது. எலைசா, பி.சி.ஆர் பரிசோதனை மூலமாக கண்டறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web