உஷாரா இருங்க... வெஸ்ட் நைல் காய்ச்சல்... சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை!

 
வெஸ்ட் நைல் காய்ச்சல்

 கேரளா மாநிலத்தில் ஒரு புறம் பறவைக்காய்ச்சல் மறுபுறம்  வெஸ்ட் நைல் காய்ச்சல் என மக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது. திருச்சூரில் வெஸ்ட் நைல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சி தீவிரம்! சளி, காய்ச்சல் உடையவர்கள் வீடு, வீடாக கணக்கெடுப்பு!

அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  வெஸ்ட் நைல் காய்ச்சல் என்பது வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்த வைரஸ், கொசுக்கள் மற்றும் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடியவை.  மேலும் இந்த வகை வைரஸ் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது. இருந்தபோதிலும் ரத்த தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இவைகளின்  மூலம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் 10 பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.  கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த 2 பேர் நேற்று உயிரிழந்தனர். அவர்களுக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்  அறிகுறிகள் காணப்பட்டதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.  

காய்ச்சல்

தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு, தலைசுற்றல் ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக அறியப்படுகிறது.  அதே சமயம் சிலருக்கு மூளை வீக்கம் மற்றும் மூளைக்காய்ச்சல்  பிரச்சனைகளும் இந்த வைரசால் ஏற்படலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். இதனால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்க அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  மேற்கு நைல் காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். அத்துடன், அனைத்து மாவட்டங்களிலும் உஷாராக இருக்கும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.   இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர்   வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் மேற்கு நைல் வைரஸ் காய்ச்சலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web