அட்சய திருதியைக்கு என்ன செய்தால் என்னென்ன பலன்?!

 
தானம்

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது மட்டுமே நல்ல பலனைத் தரும் என்பது கிடையாது. அட்சய திருதியை என்பது கொடுப்பதற்கான தினம். மன திருப்தியுடன் நீங்கள் எதைத் தருகிறீர்களோ அது உங்கள் வாழ்வில் செழிப்புடன் ஒன்று சேரும். பிறரிடம் அன்பை செலுத்தினால், நீங்கள் அன்பால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு மாதமும் திருதியை திதி வரும் என்ற போதிலும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த 3 ம் நாள் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் தான் அஷ்டலட்சுமிகளும் அவதாரம் எடுத்தார்கள். திருமகள் விஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்தாள் . இத்தகைய சிறப்புடைய நன்னாளில் தான் என்ன காரியம் செய்தாலும் வெற்றி நமக்கே என்பதை கொண்டாடும் வகையில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது.

தானம்

அட்சயதிருதியை என்பது  வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். அந்த வகையில் நடப்பாண்டில் அட்சய திருதியை மே மாதம் 10ம்  தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும். 

என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?! 

அட்சய திருதியை அன்று தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.  ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம். குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும்.  மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். 

அட்சய திருதியை
வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம்.  பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம்.  சந்தனத்தை தானமாக வழங்கினால்  ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.  இந்நாளில்  குலதெய்வத்தை பிரார்த்தித்து , இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். 
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web