என்ன செய்தார் துரைமுருகன்? வேலூரில் அவலம்... 15 கி.மீ. மருத்துவமனைக்கு நடந்தே சென்ற கர்ப்பிணி!

 
சிவகாமி

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே, நிறைமாத கர்ப்பிணி தன்னுடைய பிரசவத்திற்காக 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு நடந்தே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் வேலூர் மாவட்டத்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து கொண்டதைப் போல பல முறை இந்த தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், ஒவ்வொரு முறையும் முக்கியமான இலாகாவின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கலைஞருக்கு, ஸ்டாலினுக்கு நெருக்கமானவராகவும் இருந்துள்ளார். இது போல நிறைய இடங்கள் இருக்கு. மாற்றம் தருவோம்னு சொல்லிட்டு ஆட்சியைப் பிடிச்சாங்க... இந்த முறையாவது இந்த மாதிரியான இடங்களுக்கு விடியல் கிடைக்கும்னு நம்புனோம்... விடியல் ஆட்சியின் ரெண்டு வருஷம் முடிஞ்சுடுச்சு... இன்னும் இவங்களோட வாழ்க்கை விடியல என்று புலம்புகின்றனர்  தொகுதி மக்கள். 

வேலூர் மாவட்டம், ஜார்த்தான்கொல்லை ஊராட்சிக்குட்பட்ட முத்தன் குடிசை கிராமத்தில் வசித்து வருபவர் சேட்டு (26). இவரது மனைவி சிவகாமி (22). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை  ஒன்று உள்ள நிலையில், சிவகாமி மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான சிவகாமிக்கு கடந்த ஜூன் 28ம் தேதி திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

பிரசவ வலியால் துடித்த சிவகாமியை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்றாலும் கூட சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.

பிரசவ வலி அதிகரித்ததால் சிவகாமியை முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து நடை பயணமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிரசவ வலியோடு கர்ப்பிணி சிவகாமி சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் தெள்ளை மலை கிராமம் வழியாக நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு சென்றுள்ளார்.

pergnant

பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் அரசாங்கம் சாலை வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பலமுறை பலருக்கும் கோரிக்கை வைத்து வருகிறோம். இந்த விடியல் ஆட்சியிலாவது எங்க வாழ்க்கையில் வெளிச்சத்தைக் காட்டுங்க என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web