அச்சச்சோ... முகம் எல்லாம் வீங்கி.. கதறியழுத பிரபல நடிகை... கண்ணீர் மல்க ட்விட்டரில் பதிவு!

 
ரைசா வில்சன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். பிரபலமானவர் மாடல் அழகியும் ஆவார். யுவன் ஷங்கர் ராஜாவின் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்தது.

தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் 'கருங்காப்பியம்' எனும் படம் வெளியாகவுள்ளது.  

கடந்த ஆண்டு முகப்பொலிவு சிகிச்சைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பின் வலது கண்ணில் ரத்தக்கசிவு ஏற்பட்டு முகம் வீங்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என குற்றம்சாட்டி இன்ஸ்டாவில் பதவிட்டிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுது வடியும் புகைப்படங்களை பதிவிட்டு, சில குழப்பமான கேப்ஷனையும் பதிவிட்டு இருக்கிறார்.  

ரைசா வில்சன்

அழுதபடி இருக்கும் படங்களை ரைசா தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு, இது ஈஸி இல்ல. நீங்கள் தனியா இல்ல. படிப்படிப்படியாக தீர்வை கண்டு பிடிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ஜி.வி.பிரகாஷ், விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர். அதேபோல் ரசிகர்களும் மனம் உருகி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பலரும் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! வீடியோ!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web