பன்னீர் ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் 65.. ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு அலறவிட்ட இளம்பெண்... கதறும் உணவகம்!

 
நீரலி

தான் பன்னீர் உணவு ஆர்டர் செய்த நிலையில், தனக்கு சிக்கன் டெலிவரி செய்ததால், ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சம்பந்தப்பட்ட உணவகத்தை அலற செய்துள்ளார் இளம்பெண் ஒருவர். அகமதாபாத் நகரின் சாமுண்டாநகர் பகுதியில் வசித்து வருபவர் நீரலி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவிற்கு உணவு ஆர்டர் செய்யும் ஆப் மூலம் “பிக் அப் மீல்ஸ் பை யெர்ரா” என்ற உணவகத்தில் இருந்து பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை ஆர்டர் செய்தார். பின்னர், சாண்ட்விச்சின் சில துண்டுகளை சாப்பிட்ட பிறகு, அது பனீர் போல் இல்லை என்பதை உணர்ந்தார். அது சிக்கன் சாண்ட்விச் என்று நீரலி கண்டுபிடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நீரலி, அகமதாபாத் மாநகராட்சி சுகாதாரத் துறையில் சனிக்கிழமை புகார் அளித்தார். மேலும், அந்த நிறுவனம் தனக்கு 50 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நீரலி கூறுகையில், நான் சைவ உணவு உண்பவர், மதம் மற்றும் தனிப்பட்ட உடல்நிலை காரணமாக அசைவ உணவு உண்பதில்லை.

இந்நிலையில், நான் ஆர்டர் செய்த பன்னீர் டிக்கா சாண்ட்விச்சுக்கு பதிலாக, அந்த உணவகம் எனக்கு சிக்கன் டிக்கா சாண்ட்விச் கொடுத்தது. இது என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இதனால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டேன். அதே சமயம் எனக்கு நடந்த இந்த சம்பவத்திற்கு இந்த தொகை போதாது என குறிப்பிட்டார்.

இந்நிலையில், உணவு சப்ளை செய்த VRYLY Ventures Pvt Ltd நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், "இந்த தவறுக்காக நீரலிக்கு ரூ.5000 அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் இது தொடர்ந்தால் கடைக்கே சீல் வைக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web