கேரளாவை விடுங்க!! குஜராத்தில் 41,000 பெண்கள் மாயம்!! அதிர்ச்சி ரிப்போர்ட் !!

 
பெண்கள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தேசிய குற்ற ஆவணக் காப்பகமான NCRB வெளியிட்டுள்ள ஒரு தகவல் இந்தியாவையே அதிர்ச்சியடைய செய்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, குஜராத் மாநிலத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலான காலகட்டத்தில் 41,000 க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கின்றன.

இதில், 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் 2020 ஆம் ஆண்டில் 8,290 பெண்களும் காணாமல் போயுள்ளதாக அந்த தரவு தெரிவிக்கிறது. இதனால் இதன் அடிப்படையில் 41,621 பெண்கள் 5 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் காணாமல் போனதாக பதிவாகியிருக்கிறது. 

பெண்கள்

இது தொடர்பாக பேசியுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், காணாமல்போன சில பெண்கள் மற்றும் சிறுமிகள் வெளி மாநிலங்களுக்கு பாலியல் தொழிலுக்காக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அந்த பெண்களில் பலர் சட்டவிரோத மனித கடத்தல் கும்பலால் கடத்தி சென்று வெளி மாநிலங்களில் விற்கப்படுகிறார்கள் எனவும் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்கள் தவிர , இதுகுறித்து குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினருமான சுதிர் சின்ஹா பேசும்போது, காணாமல் போன சில வழக்குகளில், சிறுமிகள் மற்றும் பெண்கள் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்களா என்று விசாரித்து வருவதாகக் கூறினார். மேலும் இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளை காவல்துறை தீவிரமாக கையாளவில்லை எனவும், இதனால் இப்பிரச்சினைக்கு முடிவில்லாமல் உள்ளது எனவும், சிறுமிகளையும், பெண்களையும் கடத்தி வேறு மாநிலத்தில் விபச்சாரத்திற்கு தள்ளுவதென்பது கொலை வழக்கைவிட மோசமானது என அவர் கூறினார்.

பெண்கள்

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் இஸ்லாமியராக மதம் மாற்றப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டதாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தில் எவ்வித ஆதாரமும் இன்றி கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை கேட்டபோதும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இந்த படத்தை பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் கர்நாடகா தேர்தல்களத்தில் பேசி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 41000க்கும்  மேற்பட்ட பெண்கள் காணாமல் போய் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web