ஜி.வி.பிரகாஷ் மனைவியை பிரிந்ததின் காரணமென்ன? வெளியான புதிய தகவல்!

 
ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் விவாகரத்து பெற உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளது.

1993-ல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளியான ‘ஜென்டில்மேன்’ படத்தில் பாடகராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார். ரஹ்மானின் பல படங்களில் பணியாற்றி வந்த இவர், 2006-ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, கிரீடம், பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினம், ஆடுகளம், அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இதனிடையே, 2015-ல் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின், த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார், சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெயில், ரெபல், கள்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2013-ம் ஆண்டு தனது பள்ளி பருவ காதலியான பாடகி சைந்தவியை ஜி.வி.பிரகாஷ் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி எனகிற பெண் குழந்தை உள்ளது.

ஜிவி பிரகாஷ்

இந்த சூழலில் ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக பேச்சுகள் அடிப்படுகிறது.

அந்த வகையில், சைந்தவியின் குடும்பத்தின் தலையீடுதால் விவாகரத்து நோக்கி நகர முக்கிய காரணம் என்றும் கூறுகிறார்கள். ஏ.ஆர்.ரஹமானின் அக்கா மகன் என இஸ்லாமிய குடும்ப பின்னணி கொண்ட ஜி.வி.பிரகாஷும் பிராமண பின்னணி கொண்ட சைந்தவியும் கூட்டு குடும்பமாக தான் வசித்து வந்தனர். சைந்தவியின் தாய் தீவிர இந்துத்துவா சிந்தனை கொண்டிருந்த நிலையில், கருத்தியல் ரீதியாக அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்திருக்கிறது. இந்த விரக்தி தான் தாம் நடிக்கும் படங்களிலும் பொது வெளியிலும் இடதுசாரி சிந்தனைகளை ஜி.வி.பிரகாஷை அழுத்தமாக பேச வைத்திருக்கிறது. இதுவே நாளுக்கு நாள் நீயா நானா என போட்டி போட வைத்துள்ளது.

ஜிவி பிரகாஷ்

இது ஒருபுறம் இருக்க இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்ததும் சைந்தவிக்கு விருப்பமில்லாமல் இருந்து இருக்கிறது. போதாத குறைக்கு நடிகைகளுடன் ஜி.வி.பிரகாஷ் காட்டும் நெருக்கமும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அமைந்து இருக்கிறது. சில நடிகைகளுடன் ஜி.வி.பிரகாஷ் நெருக்கமாக இருப்பதாக வெளிப்படையாக கிசுகிசுக்கபட்டதும் சைந்தவியின் மனநிம்மதியை கெடுக்கவே கருத்து மோதல், மனஸ்தாபம் என ஆரம்பித்து நிரந்தர பிரிவாக விவாகரத்தை நோக்கி சென்றதாக செல்லப்படுகிறது.

அதோடு குழந்தை பிறந்த பிறகு ஜி.வி.பிரகாஷிடம் தெரிந்த மாற்றம் ஒருபுறம் இருக்க உடல்நல பாதிப்பால் சைந்தவி சிகிச்சை எடுத்த வந்தது என இருவருகிடையே சின்னதாக இருந்த இடைவெளி போக போக விரிசலாக மாறி இருக்கிறது. ஒர் ஆண்டுக்கு முன்பே இருவரும் பிரிய முடிவு எடுத்த நிலையில், குழந்தைக்காக ஒரே வீட்டில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாக கூறுகிறார்கள். ஆனாலும் ஒரே வீட்டிற்குள் ஹவுஸ் மேட் போல யார்யாரே மாதிரி வசித்து வந்தது இன்னும் மன உளைச்சல் கொடுக்கவே விவாகரத்து சரியாக இருக்கும் என கருதி மென்டல் பீஸ் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதாக கூறுகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web