HIV அதிகரிக்க காரணம்.. ஒரே போதை ஊசியை பயன்படுத்தும் மாணவர்கள்.. ஷாக் தகவல் வெளியீடு!

 
எச்ஐவி

திரிபுராவில்  கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் நோய் பரவிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், திரிபுராவில் உள்ள ஒரு கல்லூரியில் 800 மாணவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களில் 47 பேர்  இறந்துள்ளனர். ஆனால், அந்தச் செய்தி உண்மைதான் என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எச்.ஐ.வி

அதாவது, 2007 முதல் 2024 வரை இந்த எண்ணிக்கையில், 828 மாணவர்கள் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டு, பதிவு செய்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களை இது அடையாளம் கண்டுள்ளது. இதுமட்டுமின்றி, தினமும் ஐந்து முதல் ஏழு புதிய எச்.ஐ.வி. வழக்குகள் பதிவாகி வருகிறது.

இவ்வளவு பேருக்கு எச்ஐவி பரவியது எப்படி என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 164 சுகாதார மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 4,570 ஆண்கள் மற்றும் 1,103 பெண்கள் உட்பட மொத்தம் 5,674 எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருப்பது தெரியவந்தது.

போதை ஊசி

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் திருநங்கை என்று மாநில சுகாதார இணை இயக்குநர் பட்டாச்சார்ஜி தெரிவித்தார்.   எச்.ஐ.வி அதிகளவு பரவுவதற்கு முக்கிய காரணம், ஒரே  ஊசியை தான் போதைக்கு பயன்படுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web