கிணற்றில் இருந்தது தேனடை தான்... மனிதக்கழிவு அல்ல... ஆய்வு குழு அறிக்கை!

 
கிணறு

 விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு அமைந்துள்ளது.  இந்த கிணற்றில்  மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தினசரி தண்ணீர் ஏற்றப்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கிணற்றின் அருகிலும், உள்ளே சில அடி ஆழத்தில் இருந்த சுவரிலும்  மனித மலம் இருந்ததாக ஊர் மக்கள் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.  இதனை அடுத்து, கஞ்சனூர் பகுதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

கிணறு
இது குறித்த தகவல் மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது . அவருடைய தனிக்கவனத்தின் பேரில் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி  விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கூடுதல் ஆட்சியர் குழு தலைமையில் அதிகாரிகள் கிணற்றின் அருகே ஆய்வு நடத்தினர்.  மனித மலம் போல தெரிந்த பகுதியை எடுத்து சோதனை செய்ததில் அது மனித மலம் அல்ல தேனடை என்பது உறுதிசெய்யப்பட்டது. உடனடியாக இந்த தகவல்  ஊர் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊர் மக்களின் சந்தேகம் விலகியதால் நிம்மதி அடைந்தனர்.  தற்போது திறந்தவெளி கிணற்றை சுற்றி இரும்பு வேலி அமைக்கவும் கலெக்டர்  உத்தரவு பிறப்பித்து இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web