மார்பில் இளம்பெண் பெயரைப் பச்சைக்குத்திக் கொண்டு திருமணத்திற்கு வற்புறுத்தல்... வீடு புகுந்து இளைஞர் ரகளை!

 
பாலமுருகன்

ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில், மார்பில் இளம்பெண்ணின் பெயரைப் பச்சைக் குத்திக்கொண்டு, வீடு தேடிச் சென்று திருமணத்திற்கு வற்புறுத்தி ரகளைச் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். புதுவை முத்தியால்பேட்டை வாழைக்குளம் அக்காமாடசாமி சாலையில் வசிப்பவர் பாலமுருகன் (வயது 28). இவர் லாஸ்பேட்டை தனியார் மருத்துவமனை அருகே கடை வைத்துள்ளார். மருத்துவமனையில் கருவடிக்கும்பையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். வேலை முடிந்து இளம்பெண் சென்றதும், பாலமுருகன் கடைக்குச் சென்று பழங்களை வாங்கிச் செல்வார். அப்போது பாலமுருகன் அந்த இளம்பெண்ணிடம் அன்பாக பேசி காதலித்து வந்தார்.

காதல்

ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தான். ஆனால் அந்த பெண் மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் பாலமுருகன் தனது மார்பில் பெண்ணின் பெயரை பச்சை குத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதையறிந்த அந்த இளம்பெண் கண்டித்துள்ளார். அப்போதும் பாலமுருகன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் கருவடிக்குப்பத்தில் உள்ள வீட்டில் இளம்பெண் தனியாக இருந்தார். பாலமுருகன், அவரது தாய் சித்ரா, தங்கை பரமேஸ்வரி ஆகியோர் சென்று திருமணம் செய்ய மறுத்தால் குடும்பத்தினரை கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது. புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்சர்பாஷா வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், அவரது தாய் சித்ரா, தங்கை பரமேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web