வாட்ஸ் அப் புதிய அப்டேட்.. இனி இது முக்கியம்.. மெட்டா நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

 
வாட்ஸ்அப் அப்டேட்

வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் மெட்டா நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், பல நாடுகளின் விதிகளின்படி வாட்ஸ்அப்பை பாதுகாப்பான செயலியாக மாற்ற பயனாளர்களின் பிறந்த தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. தற்போது சில நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. WeBetainfo படி, இது டெக்சாஸ் போன்ற பல்வேறு அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய சட்ட மாற்றங்களுக்கு ஏற்ப செய்யப்படுகிறது.

மெட்டா

எந்தவொரு ஆன்லைன் சேவையையும் பயன்படுத்தத் தொடங்கும் முன் நாட்டில் உள்ளவர்கள் தங்கள் வயதை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. அதன்படி, தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்கும் பாப்-அப் செய்தியை ஆப் காண்பிக்கும். அமெரிக்காவின் பெரும்பாலான மாநிலங்கள் சமீபத்திய சட்ட விதிமுறைகளின்படி இந்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வயதை 15 ஆக நிர்ணயித்துள்ளன.

வாட்ஸ்அப்

எனவே, நீங்கள் சரியான வயதை உள்ளிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தத் தரவை மீண்டும் திருத்தவோ மாற்றவோ முடியாது. இருப்பினும் இந்தத் தரவு யாருக்கும் பிறந்த தேதித் தரவைக் காட்டாது. இது ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. இது பயனர்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மெட்டா நிறுவனம் உறுதியளிக்கிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web