பகீர்...பைக்கில் பட்டாசுகளை கட்டிக் கொண்டு வீலிங்... தட்டித் தூக்கிய காவல்துறை...!!

 
வீலிங்

சமூக வலைதளங்களில் லைக்குகளையும், ஷேர்களையும் அள்ளுவதற்கு இன்றைய இளசுகள் எதையும் செய்ய தயாராக உள்ளனர். பல நேரங்களில் உயிரை பணயம் வைத்து சாகசங்களில் ஈடுபட்டு அதனை வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அந்த வகையில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பைக் வீலிங் செய்து கொண்டே இளைஞர்கள் பட்டாசு வெடித்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலாக்கியது.  இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவ்வாறு வீலிங் செய்தது தஞ்சாவூரில் வசித்து வரும்  மணிகண்டன் மற்றும் திருச்சியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது.  

வீலிங்


இந்நிலையில் திருச்சி மாநகரில் பைக் வீலிங் செய்வது தொடர்பாக இன்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்ததில் இளைஞர் ஒருவர் பைக் வீலிங் செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் திருச்சி டைமண்ட் பஜாரை சேர்ந்த உசேன் பாஷா(24) என்பது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் உசேன் பாஷாவை கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

போலீஸ்

அதேபோல் திருச்சி பால் பண்ணை பகுதியில் தாராநல்லூர் பகுதியில் வசித்து வரும்   ராஜேஷ்   அதிவேகமாக பைக் ஓட்டி சாகச முயற்சியில் ஈடுபட்டார். அவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் குழுமாய்கரை ரோட்டில் பைக் வீலிங் செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் பைக் வீலிங் செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் இவர்தான் பைக் வீலிங் செய்து கொண்டு பட்டாசு வெடித்த இளைஞரில் ஒருவர் என்பதும் தெரிய வந்தது. அதனையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பைக் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த விவகாரத்தில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web