எடப்பாடி பழனிசாமி சென்ற போது விபரீதம்.. அதிமுக நிர்வாகி கார் மோதி தொழிலாளி பரிதாபமாக பலியான சோகம்!
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி. தொடர்ந்து தொழில் மற்றும் அரசியல் பயணங்கள் இருந்தபோதிலும், எடப்பாடி பழனிசாமி அவரது வீட்டிற்கு அவ்வப்போது வந்து செல்வார். அவருடன் பாதுகாவலர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வாகனம் வந்துள்ளது. இதனிடையே சம்பவத்தன்று எடப்பாடி பழனிசாமி தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அதிமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரும் பயணம் செய்தார்.
EPS-உடன் வந்த கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட நபர் பலி.. வெளியான அதிர்ச்சி CCTV காட்சி#thanthitv #eps #cctv pic.twitter.com/hOz5PP9uR3
— Thanthi TV (@ThanthiTV) December 21, 2024
அவர்களின் வாகனம் சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சந்திப்பில், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சாலையை கடந்தார். எடப்பாடி பழனிசாமியுடன் வந்த அனைத்து வாகனங்களும் முன்னால் சென்றபோது, இருசக்கர வாகன ஓட்டி சாலையை கடந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக, சில வினாடிகள் தாமதமாக வந்த ஒன்றியச் செயலாளரின் கார், தொழிலாளி ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகளின்படி, விபத்து டிசம்பர் 19 மாலை 03:35 மணியளவில் நடந்துள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளை ஏற்றிச் செல்லும் கார்கள் எப்பொழுதும் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளதால், சாலையில் செல்வோர் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால் பொறுமையாக இருப்பது நல்லது. அதே சமயம், அரசியல் தலைவர்கள் அதிவேகமாகச் சென்று அவர்கள் இலக்கை அடையும் பட்சத்தில், அதிகாரிகள் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதையும் உறுதி செய்ய வேண்டும். மேற்கண்ட விபத்து தொடர்பான மற்ற விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
