மேல்மருவத்தூர் சென்று திரும்பிய போது பயங்கரம்.. நேருக்கு நேர் மோதிய பேருந்து - லாரி.. 4பேர் பலியான சோகம்!
ராணிப்பேட்டையை அடுத்த எம்ரால்டு நகர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற லாரி, மேல்மருவத்தூரில் தரிசனம் செய்துவிட்டு கர்நாடகா நோக்கிச் சென்ற பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களை மீட்ட போலீசார் உடனடியாக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!