வெளியூர் வேலைக்கு சென்ற போது விபரீதம்.. பைக்கை தட்டி தூக்கிய கார்.. இருவர் பரிதாப பலி!

 
 சுரேந்தர் - தயாநிதி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த கொத்துக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுரேந்தர் (வயது 24). இந்த நிலையில் சுரேந்தர் ஊட்டிக்கு வேலைக்கு செல்வதாக தயராகி வந்தார். இரவில் பஸ் இல்லாததால், சுரேந்திரனை பஸ்சில் அனுப்ப, அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (25), தயாநிதி (18) ஆகியோர் ஒரே இருசக்கர வாகனத்தில் கொத்தக்கோட்டை கிராமத்தில் இருந்து வாணியம்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஓட்டி வந்தார். அப்போது வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் நோக்கி சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளர்கள் சுரேந்தர் (24), தயாநிதி (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சக்திவேல் (25) பலத்த காயமடைந்தார்.

தகவல் அறிந்த கிராமிய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த கோவிந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web