கல்லூரிக்கு சென்ற போது விபரீதம்.. லாரி மோதி அக்கா, தம்பி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலி!

 
மதுமிதா - ரஞ்சன்

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள தோட்டா நாகமங்கலா பகுதியை சேர்ந்தவர் மதுமிதா (20). பெங்களூரு எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் படித்து வந்தார். இவரது தம்பி ரஞ்சன் (18). மதுமிதா இன்று பைக்கில் கல்லூரிக்கு செல்ல தயாராகினார். பின்னர் அவரை கல்லூரியில் விடுவதற்காக ரஞ்சன் அவருடன் சென்றார்.

விபத்து

இந்நிலையில் மதுமிதா கல்லூரி நோக்கி பைக்கை ஓட்டினார். அப்போது வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் லாரி மதுமிதா ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதனால் மதுமிதாவும், ரஞ்சனும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது இருவரும் லாரிச் சக்கரத்தில் சிக்கினர். இதில் மதுமிதாவும், ரஞ்சனும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் எலக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மதுமிதா, ரஞ்சன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, ​​அதிவேகமாக வந்த லாரி மதுமிதா, ரஞ்சன் ஆகிய இருவர் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்திய காட்சி பதிவாகியுள்ளது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர். அதிவேகமாக சென்ற லாரி மீது கல்லூரி மாணவியும், அவரது தம்பியும் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web