இன்ஸ்டா தோழியை பார்க்க சென்ற போது விபரீதம்.. குளத்தில் மிதந்த 3 சடலங்கள்.. அதிர்ச்சி பின்னணி!
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த டிசம்பர் 18ஆம் தேதி காணாமல் போனார்.எனவே அவரது பெற்றோர் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போலீசார் காணாமல் போன பள்ளி மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று குறிச்சிக்கோட்டை அருகே மானுப்பட்டி பகுதியில் உள்ள குளத்தில் 3 உடல்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளத்தில் மிதந்த 3 உடல்களையும் மீட்டனர். அப்போது, சடலம் ஒன்று காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி என்பது தெரியவந்தது. அதே நேரத்தில், மற்ற இரண்டு உடல்களின் அடையாளத்தையும் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தது சென்னையைச் சேர்ந்த ஆகாஸ் (19), குறிச்சிக்கோட்டையைச் சேர்ந்த மாரிமுத்து (20) ஆகியோரின் சடலங்கள் என்பது தெரியவந்தது.

பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குளத்தில் விழுந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அமராவதி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் ஆகாஷ் பழகி வந்ததும், அவரை பார்க்க வந்த ஆகாஷ், சிறுமி மற்றும் மாரிமுத்து இருவரும் ஒரே பைக்கில் சென்றபோது குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
