நாளை சந்திரகிரகணம் எப்போது? .. வெறும் கண்ணால் பார்க்கலாமா?

 
சந்திரகிரகணம்

நாளை அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி 2023 ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ உள்ளது.  சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுப்பதால்   சந்திர கிரகணம் எனப்படுகிறது.

சந்திரகிரகணம்


  பௌர்ணமி நாளில்   சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. அப்போது சந்திரனின் ஒரு பகுதி இருட்டாக காணப்படும். அந்த சமயம் பூமியில் இருந்து நாம் சந்திரனை பார்க்கும்போது, பூமியின் நிழல் விழுந்து சந்திரனின் மறைக்கப்பட்ட பகுதி மட்டும் இருட்டாக தெரியும்.   சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்.  அக்டோபர் 28ம் தேதி நள்ளிரவு  1:05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2:24 மணிக்கு முடியும்.

சந்திரகிரகணம்

கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும்.  இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை  வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.  இந்தியாவை தொடர்ந்து   ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தின் சில பகுதிகள்  என   கிழக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியலாம். அமெரிக்காவில்  சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web