அடி தூள்... பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

 
பள்ளிகள்

 தமிழகத்தில் மார்ச் மாதம் முதலே   கோடை காலம் தொடங்கி விட்டது. இதனால் சாலையோரங்களில் இளநீர், பதநீர், தர்ப்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தின் பல இடங்களில் வெயில் 100டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. இடையில் பெய்த கோடை மழை காரணமாக வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்த நிலையில்  தற்போது மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பள்ளிகள்

இதன் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். 
இது குறித்து  இன்று செய்திக்குறிப்பு ஒன்றை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.  தற்போது முதல்வர் ஜப்பான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்து  ஜப்பானில் இருந்து முதல்வர்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு, என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என கேட்டார். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சொல்லப்பட்டது.

பள்ளிகள்

அத்துடன் காணொலி மூலம் மாவட்ட கல்வி அலுவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி திறப்பை தள்ளி வைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் வெயிலின் கடுமையும் அதிகரித்துள்ளது என்பது உண்மை தான்.கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும்  எனக் கூறியுள்ளார். மேலும் 1ம் வகுப்பு  முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7ம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கும் நாளில் அன்றே பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web