இந்த வெயில் எப்ப குறைஞ்சு மழை பெய்யும்? வெதர்மேன் அறிவிப்பு!!

 
இன்று இரவு அச்சச்சோ!! வெதர்மேன் பரபரப்பு தகவல்!!

சென்னையில் எப்போதில் இருந்து வெயில் குறையும், எப்போது மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பொதுவாக பங்குனி , சித்திரையில் வெயில் கொளுத்தும் அக்னி நட்சத்திர காலம் நிறைவடைந்ததும் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கும். ஆனால் நடப்பாண்டை பொறுத்தவரை வெயில் குறையவே இல்லை.ஆனால் நடப்பாண்டில் கோடை காலம் முடிந்து விட்ட பிறகும்  சென்னையில் இன்னும் வெயில் குறையவில்லை.  மே 24ம் தேதியுடன்   வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

வெயில் , மழை

மே  25ம் தேதி  இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கும். அத்துடன்  இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இதனையடுத்து வெளியிட்டசெய்திக்குறிப்பில்  ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.   ஆனால் இன்று வரை வெப்ப அலையும் முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலின் தாக்கமும்  குறையவில்லை.
தமிழகத்தை பொறுத்தவரை  தொடர்ந்து வெயில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின்   பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. 

வெயில் மழை
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்தது.  சென்னையை பொறுத்தவரை  பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.    கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக  இந்த வருடம்    பார்க்கப்படுகிறது.  மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் மீண்டும் சென்னையில் வெயில் அடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வெயில்மழை குறித்து   தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்   சென்னையில் இன்றும் வெயில் மோசமாக இருக்கும். சென்னையின் 40 + டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையே தொடரும்.   வரும்  ஞாயிற்றுக்கிழமை  ஜூன் 18ம் தேதி முதல் சென்னையின் வெப்ப நாட்கள் முடிவுக்கு வரும். ஜூன் மாதம் சென்னைக்கு ஒன்றும் வலுவான மழை மாதம் அல்ல.   இந்த மாதம் சராசரியை விட  2  மடங்கு நல்ல மழை பெய்யக்கூடும் வாய்ப்பு உள்ளதாக  தமிழக  வெதர்மேன் பிரதீப்  ஜான் தெரிவித்துள்ளார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web