எந்தெந்த துறை யார் யாருக்கு?! தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்!!

 
ஆளுநர் மாளிகை

தமிழகத்தின் முதல்வராக  ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு  பொறுப்பேற்று 2 முழு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்த முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதே நேரத்தில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2022ல் ஒரு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதில் ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அமைச்சர்கள் பட்டியல்

அமைச்சர்கள் பட்டியல்

அவரிடம் இருந்த போக்குவரத்து துறை, சிவசங்கருக்கு மாற்றப்பட்டது.  2 வது முறை மாற்றி அமைக்கப்பட்ட அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சிறப்பு திட்ட செயலாக்கத் துறைகள் வழங்கப்பட்டன. அதே நேரம், கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதுதவிர, வீட்டுவசதி துறையில் இருந்து சிஎம்டிஏ பிரிக்கப்பட்டு, அறநிலைய துறைஅமைச்சர் சேகர்பாபுவிடம் தரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அமைச்சரவை மாற்றம் தகவல்கள் வெளியாகி வந்தன.  அந்த வகையில் தற்போது தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி 

தங்கம் தென்னரசு
 தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு 
டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை 
சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி 
பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் 
மனோ தங்கராஜ் - பால்வளத்துறை

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web