இந்தியாவின் ‘செக்ஸ் தலைநகரம்’ புனே! அப்போ எங்க ஊருக்கு எத்தனையாவது இடம்... ட்ரெண்டாகும் விவாதம்!

ட்விட்டரில் விநோதமான வாக்குவாதம் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த இரு தினங்களாக ட்விட்டர் பயனர்களிடையே 'இந்தியாவின் செக்ஸ் தலைநகரம்' எது என்கிற சர்ச்சையான வாக்குவாதம் அனல் பறக்க நிகழ்ந்து வருகிறது. இந்தியாவின் செக்ஸ் தலைநகரம் புனே என்று ஒரு ட்விட்டர் பயனர் பதிவிட்டிருந்த நிலையில், பலரும் அதன் கீழ் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னொரு பயனர், இல்லை.. பெங்களூரு தான் செக்ஸ் தலைநகரம் என்று கமெண்ட் செய்து எதிர்வினையாற்றினார்.
Bhai Pune is sex capital of India
— vaeb | ceasefire now (@vaebchandra) May 11, 2024
இந்தியாவில், வளமான வரலாறு, கலாச்சாரம், புகழ்பெற்ற, மதிப்புமிக்க கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் துறையின் மையம் என்று புனே பல்வேறு காரணங்களுக்காக தலைநிமிர்ந்த நகரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த நகரத்தை "இந்தியாவின் பாலியல் தலைநகரம்" என்று அழைக்கப்படுவதை யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.
ட்விட்டரில் ஒரு பயனர், "புனே இந்தியாவின் பாலியல் தலைநகரம்" என்று பதிவிட்டிருந்தார். ட்விட்டர் பயனர்களிடையே இந்த பதிவுக்கு இத்தனை எதிர்கருத்துகள் வரும் என்று அவர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். இந்த ட்விட்டர் இடுகை பெரும் எதிர்வினைகளைப் பெற்றது.
ட்விட்டர் பயனர்களிடையே பலரும் பெங்களூரு, மும்பை, டெல்லி என்று செக்ஸ் தலைநகரமாக தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க துவங்கி, இது விசித்திரமான போட்டியாக மாறியது.
ஒரு பயனர், "நான் புனேவைச் சேர்ந்தவன். இன்னும் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்று கருத்து தெரிவித்தார். இன்னொருவர், "இல்லை, இது பெங்களூருக்கு தான் சரியாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்தார்.
"கல்யாணி நகர், கே.பி., விமான நகர், மகர்பட்டா, கேம்ப், ஹிஞ்சவாடி, கோத்ருட்டின் சில பகுதிகள் மட்டுமே" என்று இன்னொருவர் கருத்து தெரிவித்தார்.
"அண்ணே, புனேயில் தங்கி 20 வருடங்கள் ஆகிறது! என்ன பேசுகிறீர்கள்?" என்று மற்றொருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.
ட்விட்டரில் மற்றொரு நபர், " புனேவை இந்தியாவின் பாலியல் தலைநகராக அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் இடுகை நகைச்சுவையான எதிர்வினைகளையும், ஒப்பீடுகளையும் பெற்று ட்விட்டர் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!