யார் ஆட்சியைப் பிடிக்கிறார்கள்? பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை.. நாடு முழுவதும் எதிர்பார்ப்பு!

 
பீகார்

பீகார் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெற்றது. வரலாற்றிலேயே அதிகமாக 67.13% வாக்குகள் பதிவானது மாநில அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ‘விவிபாட்’ ஒப்புகை சீட்டு பெட்டிகளும் இரட்டை பூட்டுடன் பலத்த பாதுகாப்பில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ள வளாகங்களில் தலா ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் கண்காணிப்பு செய்து வருகின்றனர். மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் தொகுதி நடத்தும் அதிகாரிகள் வரை, அனைவரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து பரிசோதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பீகார் ஆட்சி

மொத்தம் 38 மாவட்டங்களில் 46 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் இரு அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. உள்அடுக்கில் ஆயுதம் தாங்கிய துணை ராணுவப்படையினர், வெளிஅடுக்கில் மாநில போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கும் நிலையில், பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 9 மணியிலிருந்து ஆரம்ப முன்னிலை நிலவரங்கள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் வகையில் முழு செயல்முறையும் வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.

பீகார்

தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என சுட்டிக்காட்டினாலும், இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக நிராகரிக்கின்றன. “மகா கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும்” என்று தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதனால், தொடர்ந்து 5-வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சர் பதவியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா?  பீகாரின் அரசியல் விதி இன்று தெளிவாகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!