ரூ.2,700 கோடி யாருடையது? சிக்கலில் பிரபல வங்கி... வருமானவரித்துறை அதிரடி!?

 
2000

தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை குறித்து வருமான வரித்துறை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர் விவரம், செலுத்தும் பணம், எடுக்கும் பணம், வைப்புத் தொகை போன்ற பண பரிவர்த்தனை விவரங்களையும், பங்குகள் மற்றும் டிவிடெண்ட் விற்பனை விவரங்களையும் வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு வருடமும் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தனியார் வங்கியான டி.எம்.பி இந்த நடைமுறையை பின்பற்றாமல் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து அந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

மெர்கண்டைல் வங்கி

இந்த சோதனையில் சுமார் 10 ஆயிரம் கணக்குகளில் ரூ.2,700 கோடி அளவுக்கு டெபாசிட் தொகை விவரங்களை இந்த வங்கி தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது.. 110 கோடிக்கான கிரெடிட் கார்டு பரிவர்த்தனை விவரங்களை தெரிவிக்கவில்லை. ரூ.200 கோடி அளவுக்கு டிவிடெண்ட் ரூ.600 கோடி அளவுக்கு பங்குகள் விற்பனை பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை இந்த வங்கி தெரிவிக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் பரிவர்த்தனை தொடர்பாக தாக்கல் செய்ய வேண்டிய படிவம் 61B பல குறைபாடுகளுடன் இருந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வங்கி

இந்த வங்கி 05.07.2022 அன்று ஐ.பி.ஓவை வெளிக்கொண்டு வந்தது. ரூ.525க்கு பட்டியல் இடப்பட்டது, நேற்றைய வர்த்தகத்தில் இப்பங்கின் விலை பி.எஸ்.சியில் 438.50க்கு வர்த்தகமாகி வருகிறது. தற்பொழுது கணக்குகளில் குறைபாடு இருப்பதாக வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளதால் திங்கள் அன்று சரியும் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள். மேலும் 2,700 கோடி ரூபாய் யாருடையது என்கின்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே எழுந்திருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web