2026ல் தமிழகத்தில் யார் ஆட்சி... கருத்துக்கணிப்பில் திடீர் ட்விஸ்ட்!

 
கருத்துக்கணிப்பு

2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், சாணக்யா டிவி நடத்திய கருத்துக்கணிப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த சர்வேயில், அதிமுக–பாஜக கூட்டணி அதிக ஆதரவு பெறுவதாகவும், அடுத்து திமுக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், நாம் தமிழர் கட்சியும் வரும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மொத்தம் 32 தொகுதிகளைச் சேர்ந்த 2,989 வாக்காளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடு, முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் விஜயின் அரசியல் வரவுக்கு மக்கள் எதிர்வினை, கூட்டணி விருப்பங்கள் உள்ளிட்ட விவரங்கள் இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ளன.

தவெக விஜய்

மத்திய பாஜக அரசு குறித்து

மோசம் - 24%
பரவாயில்லை - 41%
சிறப்பு - 32%

மாநில திமுக ஆட்சி குறித்து

மோசம் -  45%
பரவாயில்லை - 35%
சிறப்பு - 20%

நயினார் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு குறித்து

மோசம் - 41%
பரவாயில்லை - 37%
சிறப்பு- 22%

நடிகர் விஜய் அரசியல் செயல்பாடு குறித்து

மோசம் - 24%
பரவாயில்லை — 47%
சிறப்பு — 29%

விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா?

வேண்டாம் — 26%
வேண்டும் — 36%
பிறகு பார்க்கலாம் — 38%

விஜய் கூட்டணி வைக்க வேண்டுமானால் யாருடன்?

காங்கிரஸ் — 18%
நாம் தமிழர் — 21%
அதிமுக–பாஜக — 61%

இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றிபெறுவர்?

நாம் தமிழர் — 5%
திமுக கூட்டணி — 36%
தமிழக வெற்றிக் கழகம் — 20%
அதிமுக–பாஜக கூட்டணி — 39%

இந்த கருத்துக்கணிப்பின் படி, 2026 தேர்தலில் அதிமுக–பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகம் என கூறப்பட்டுள்ளது. எனினும், இது ஆரம்ப நிலை வாக்காளர் மனோபாவம் மட்டுமே என்பதால், அடுத்த மாதங்களில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் பிரசாரங்களும் தவிர்க்க முடியாத வகையில் பலன்களை பாதிக்கக்கூடும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?