நிலவுக்கு மனிதர்களை அனுப்ப போவது யார்?!... எதிர்கால விண்வெளி பந்தயத்தில் அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி!

 
நிலா சீனா அமெரிக்கா

நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்பும் போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகியுள்ளது.

1969ம் ஆண்டு ‘அப்போலோ–11’ விண்கலத்தின் மூலம் அமெரிக்கா நிலவில் மனிதரை வெற்றிகரமாக தரையிறக்கியது. அதன்பின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மனிதன் நிலவில் கால்பதிக்கவில்லை. இப்போது அந்த வரலாற்றை மீண்டும் எழுதுவதற்காக உலகின் இரண்டு பெரும் வல்லரசுகளும் ஆயத்தமாக உள்ளன.

சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம், ‘மெங்சூ’ (Mengzhou) எனப்படும் புதிய விண்வெளி திட்டத்தின் கீழ், 2030ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. ஆறு விண்வெளி வீரர்களுக்கான சிறப்பான விண்கலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான முன்னேற்பாடாக அடுத்த ஆண்டு ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் முயற்சி நடைபெற உள்ளது.

சிவப்பு நிலா

சீனாவுக்கு இதற்கு வலுவான அடித்தளம் உள்ளது. ஏற்கெனவே ‘தியாங்காங்’ எனும் தனது சொந்த விண்வெளி நிலையத்தைப் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ள சீனா, பல முக்கியமான விண்வெளி பயணங்களையும் வெற்றிகரமாக முடித்துள்ளது. 2030க்குப் பின் சர்வதேச விண்வெளி நிலையம் செயலிழக்கவுள்ள நிலையில், உலகில் தனித்துயாக விண்வெளி நிலையம் கொண்டிருக்கும் ஒரே நாடாக சீனா மாறும் வாய்ப்பு உள்ளது.

இதற்கு எதிராக, அமெரிக்காவின் நாசா தரப்பில் ‘ஆர்டெமிஸ்-3’ (Artemis-3) திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு மனிதரை அனுப்புவதற்கான பணிகள் முன்னேறி வருகின்றன. இது 1972ம் ஆண்டு ‘அப்போலோ-17’ பயணத்திற்குப் பின் அமெரிக்காவின் முதல் நிலவு பயணம் ஆகும். எனினும் தொழில்நுட்ப சிக்கல்கள், நிதி தாமதங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இத்திட்டம் காலவரிசையில் தாமதம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நீல நிலா

நாசாவின் முன்னாள் துணை நிர்வாகி மைக் கோல்ட் கூறுகையில், “நிலவிற்கு முதலில் சென்ற நாடே அங்கு எதிர்கால நடவடிக்கைகளுக்கான வழிகாட்டியாக மாறும்” என்றார். அடுத்த சில ஆண்டுகளில் நடைபெறவிருக்கும் இந்த நிலவு பந்தயம், உலக விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கப் போவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!