களத்தில் யார் யார்? எகிறும் எதிர்பார்ப்பு.. இன்று டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்!
டெல்லி அரசியல் சடுகுடு ஆட்டத்தில் அடுத்தக்கட்ட ஆட்டம் விறுவிறுப்பாக துவங்கி உள்ளது. இன்று காலை டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்குகிறது.வரும் பிப்ரவரி 23ம் தேதியுடன் டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஜனவரி 10ம் தேதி காலை தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. வேட்புமனுக்கள் ஜனவரி 18ம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20-ம் தேதி கடைசி நாள். தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்.
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் டெல்லி சட்டசபையில் யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே டெல்லி அரசியலில் கட்சித் தாவல்கள், காரசார வாக்குவாதங்கள் என களை கட்டியுள்ள நிலையில் தேர்தல் திருவிழாவிற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!