தவெகவை ஏன் தவிர்க்கிறீர்கள்? ... தலைமைத் தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்!

 
தவெக விஜய்

தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு வழங்க வேண்டும் எனக் கட்சித் தலைவர் விஜய், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுகுறித்த முன்னாள் அரசியல் கட்சி கூட்டத்துக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற முக்கிய ஆலோசனைகளில் தனது கட்சியும் இடம்பெற வேண்டியது தேர்தல் நடுநிலைமைக்கான அடிப்படை அம்சம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான காலம் மிக குறைவாக உள்ளதோடு, பண்டிகை காலம் காரணமாக பணிகள் தடங்கலுக்கு உள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக விஜய் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன்னரே சுருக்க திருத்தப் பணிகள் நடந்த நிலையில், மீண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெறுவது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தேர்தல் ஆணையத்தின் அறிக்கைகளில் தெளிவின்மை இருப்பதாகவும், இதனால் வாக்காளர்கள் குழப்பமடைகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் தங்களின் வழக்கமான பணியையும் இந்தத் தேர்தல் வேலையையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் சிக்கல் அதிகரித்துள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான அலுவலர்களிடம் 2002 மற்றும் 2005 ஆண்டுகளுக்கான வாக்காளர் பட்டியல் இல்லாததும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எஸ்.ஐ.ஆர். குறித்து மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாத நிலையில், எந்த தமிழ் வாக்காளரும் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடாது என்பதே தனது சார்பான கோரிக்கை என விஜய் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!