மாணவியை உள்ளாடையைக் கழட்டி பரிசோதனை!! நீட் தேர்வு அவலங்கள்!!

 
மாணவி

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு  மத்தியில் ஆண்டுதோறும் நீட் தேர்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் மாணவ, மாணவிகளிடம் அத்துமீறல்கள் நடந்தன. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளளது.

சென்னையில் தேர்வு மையத்தில், உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்த காரணத்தால் அதனை கழட்ட வேண்டும் என தேர்வு கண்காணிப்பாளர் வலியுறுத்தியதால் மாணவி உள்ளாடையை கழட்டி விட்டு தேர்வு எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி

கம்மல்,வளையல்,செயின் ,தோடு போன்ற மெட்டல் சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்கிற விதி உள்ளது. ஆனால் உள்ளாடையில் இருக்கும் இரும்பு ஊக்கினை காரணம் காட்டி உள்ளாடையை அவிழ்க்க சொல்லியுள்ளனர்.  

சென்னை மயிலாப்பூர் பி.எஸ் மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவி ஒருவரின் உள்ளாடையை கழட்டி வைத்துவிட்டு தேர்வெழுத சொன்ன அவலம் நிகழ்ந்திருக்கின்றது. உள்ளாடையில் இருந்த இரும்பு ஊக்கினை காரணம் காட்டி அந்த பெண் மேலே ஆடைக்குள் அணிந்திருந்த உள்ளாடையை கழட்ட சொல்லி அதன்பிறகே தேர்வெழுத மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

மாணவி

நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளிடம் கட்டுப்பாடு என்கிற பெயரில் வரம்பு மீறி தேர்வு கூட கண்காணிப்பாளர்கள் நடந்து கொள்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது உள்ளாடையை கழட்ட சொன்ன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web